மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முதன்முறையாக மாவீரர் தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக மட்டக்களப்பு படுவான்கரையில் உள்ள மாவடிமுன்மாரியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

கடந்த காலயத்தில் கிழக்கு விடுவிக்கப்பட்டதன் பின்னர் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் முகாமாக மாற்றப்பட்டிருந்த மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் இருந்து படையினர் சென்றுள்ளதன் காரணமாக இன்று அங்கு மாவீரர் தினம் அனுஸடிக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அப்பகுதிக்கு சென்று காடுமண்டிக்கிடந்த அப்பகுதியில் இந்த மாவீரர் தினத்தை அனுஸ்டித்தார்.

இந்த நிகழ்வில் மாவீரர்களின் உறவினர்கள்,அரியநேத்திரனின் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நூறுக்கும் மேற்பட்ட மாவீரர்கள் புதைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.