புனித மிக்கேல் கல்லூரி சிங்கிதி சாரணர் மாணவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் ஆரம்ப பிரிவு சிங்கிதி சாரணர் மாணவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு இன்று  நடைபெற்றது .




மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின்  ஆரம்ப பிரிவு சிங்கிதி சாரணர் இரண்டாவது படையணி மாணவர்களுக்கு சின்னஞ்சூட்டும் நிகழ்வு கல்லூரி  அதிபர்  வெஸ்லி லியோ வாஸ்  தலைமையில்  இன்று திங்கட்கிழமை (21) நடைபெற்றது .

கடந்த 32 வருடங்கள் ஆசிரியர் பணியினை மேற்கொண்டு  ஓய்வுநிலை அடையும் ஆரம்பப்பிரிவு அதிபர் கே .கனகசிங்கம் அதிபரின் சேவையினை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது .

இதன்போது  58    புதிய சிங்கிதி  சாரண மாணவர்களுக்கும் சின்னஞ்சூட்டப்பட்டு கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டது  

இந்த சின்னஞ்சூட்டும் நிகழ்வில்   ஆரம்பப்பிரிவு அதிபர்  கே . கனகசிங்கம் , கல்லூரி அபிவிருத்தி  சங்க  செயலாளர் .ஜெகநாதன் பிரதி அதிபர் எஸ்.தவராஜா,  ஆசிரியை திருமதி ஹம்சலா ரவி மற்றும் சாரணிய ஆசிரியைகளான திருமதி க.தமிழ்ச்செல்வன், திருமதி வ.ஜெயகாந்தன் சிங்கிதி ,சாரணிய மாணவர்கள் ,பெற்றோர்கள்  கலந்துகொண்டனர்  

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப்பாடசாலையில் சிங்கிதி, குருளை,  சிரேஸ்ட சாரணர்,  ரோவர்,  திறந்த சாரண படையணி என 500க்கும்  மேற்பட்ட சாரணர் மாணவர்கள்  உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய சிங்கிதி சாரண மாணவர்களை உருவாக்கிய பெருமை மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசியப்பாடசாலைக்குண்டு.

இப்பாடசாலையில் சாரண இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆவது ஆண்டைக் 2017ஆம் ஆண்டு கொண்டாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.