மட்டக்களப்பு விளையாட்டுக்கழகத்தினால் கராத்தே வகுப்புகள் ஆரம்பம்

மாணவர்கள் இன்று திசைமாறிச்செல்லும் நிலையேற்பட்டுள்ளது.அவர்களை சரியான வழியில் கொண்டுசென்று ஓழுக்கமுடையவர்களாக மாற்றுவதற்கு கராத்தே வகுப்புகள் மிகவு சிறப்பானவையாகும் என மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு விளையாட்டுக்கழகத்தினால் சோட்டாக்கன் கராத்தே பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தின் விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ரி.மதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி போதனாசிரியர் திருமதி ரோகினி புனசிங்கம் மற்றும் சர்வதேச சோட்டாக்கன் கராத்தே சங்க போதனாசிரியரும் மட்டக்களப்பு விளையாட்டுக்கழகத்தின் போதனாசிரியருமான டில்சான் யுரங்கபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கண்காட்சி போட்டிகளும் நடாத்தப்பட்டதுடன் பயிற்சிகளும் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டினையும் கராத்தே விளையாட்டு போட்டியில் இளைஞர்களை உட்கொண்டுசெல்லும் வகையிலும் இந்த கராத்தே பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளன.