அகில இலங்கை இந்துமாமன்றமும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும் இணைந்து ஏற்பாடுசெய்த நாவலர் மாநாடும் சிவதொண்டர் ஆன்மீக எழுச்சி சிந்தனைக்களமும் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு.கல்லடி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் இந்த நிகழ்வில் இன்று காலை கோலாகலமான முறையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக இந்தியாவின் பேரூராதீனம் இளையபட்டம் வணக்கத்திற்குரிய சீர்வளசீர் மருதாசல அடிகளார்,நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞாசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்,மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரபானந்தஜி மகராஜ் அகியோர் கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதியாக அகில இலங்கை இந்துமாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டன்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனை முன்னிட்டு கல்லடி,உப்போடை சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று ஆறுமுகநாவலரின் திருவுருவம் தாங்கிய ஊர்வலம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் வரையில் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் ஆன்மீக தலைவர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சுவாமி விபுலானந்தரின் திருவுருவசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு நந்திக்கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.