புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமும் மரம் நடுகை நிகழ்வும்

(லியோன்)

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின்  140 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில்  மாபெரும் இரத்ததான நிகழ்வும் மரம் நடுகை நிகழ்வும் இடம்பெற்றது .
 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் 140 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் 2014 ஆம் வருட  கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வும் மரம் நடுகை நிகழ்வும் கல்லூரி  அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் இன்று காலை கல்லூரியில் இடம்பெற்றது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில்  இரத்த வங்கி வைத்திய பிரிவு அதிகாரிகளினால்  விடுக்கப்படுகின்ற  வேண்டுகோளுக்கு இணங்க கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் 140 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் “ இரத்ததானம் செய்வோம் மனித உயிர காக்க “ எனும் தொனிப்பொருளில்  இரத்ததான முகாமும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் பசுமை காக்க “எனும் தொனிப்பொருளில்    மரம் நடுகை நிகழ்வும்  நடைபெற்றது .

2014 ஆம் வருட மாணவரகளினால் கல்லூரி வளாகத்தில்  மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் தொடர்ந்து கல்லூரியில்  காலை 09.00மணி முதல் பிற்பகல் 02.00மணி வரை   இரத்ததான முகாம் நடைபெற்றது .

இந்த இரத்ததான முகாமில்  கல்லூரி பிரதி அதிபர் ,ஆசிரியர்கள், மாணவர்கள் , கல்லூரி நலன் விரும்பிகள் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர்  மிதுனா  விமலசேன  வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்
























 .