கிழக்கு மற்றும் தெற்கு மாகாண கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கருத்தாடல்கள்

(லியோன்)

கிழக்கு மற்றும் தெற்கு மாகாண பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையிலான  ஐந்து நாள் கருத்தாடல்கள் மட்டக்களப்பில் நடைபெற்றது .


நாடு பூராவும் ஒவ்வொரு கல்வி வலயங்களிலும் ஒவ்வொரு சகோதர பாடசாலைகள் உருவாக்கும் நோக்குடன் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஏற்பாட்டில்  கிழக்கு மாகாண மற்றும் தெற்கு மாகாண கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஐந்து நாள் கருத்தாடல்கள் 26 ஆம் திகதி முதல்    30ஆம் திகதி வரை மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது .

கடந்த ஐந்து நாட்கள் நடைபெற்ற மாணவர்களுடைய கருத்தாடல்கள் நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு 30.11.2016  இன்று புதன்கிழமை சத்துருக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்க மற்றும் அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி .எஸ் .எம் . சாள்ஸ் ,மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே . பாஸ்கரன் , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி .தவராஜா , கிழக்குமாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகள் மற்றும் காலி , மாத்தறை , அம்பாந்தோட்டை , மட்டக்களப்பு , திருகோணமலை , அம்பாறை ஆகிய மாவட்டங்களின்  பாடசாலைகளின் மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.