பிரதான வீதிகளை காபெட் படுத்தப்படும் பணிகள் ஆரம்பம்

(லியோன்)


மட்டக்களப்பு மாநகர எல்லைகுற்பட்ட  பிரதான வீதிகளை காபெட் படுத்தப்படும்  பணிகள்   ஆரம்பிக்கப்பட்டுள்ளன .


நகர அபிவிருத்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு நகர வீதி அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட  200 மில்லியன் ரூபா  நிதியின் கீழ் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையுடன் மட்டக்களப்பு மாநகர எல்லைகுற்பட்ட  பிரதான வீதிகளுக்கு காபெட் இடப்பட்டு செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

இதன் முதற்கட்ட ஆரம்ப  பணிகள்  இன்று .மட்டக்களப்பு முனிச் வீதிக்கு காபெட் போடப்பட்டு செப்பனிப்படும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டது . 


இதனை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ் .எம் சார்ள்ஸ் ,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர் நெடுஞ்செழியன் , மாவட்ட செயலக  கணக்காளர்  எஸ் .நேசராசா ,மாவட்ட செயலக பொறியியலாளர்  டி . சுமன் . மாவட்ட வீதி  அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளர் டி . பத்மராஜா மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்  ஆகியோர் வருகை தந்து பார்வையிட்டனர் .