வாகரை பிரதேச இளைஞர் முகாமின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர்.

(சசி துறையூர்) 

 பிரதமரின் கொள்கை திட்டமிடல்
பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு மற்றும்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கோப் 2016
நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வாகரை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின்ஏ ற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை(25.11.2016) தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரை வாகரை மகா வித்தியாலயத்தில் பிரதேச இளைஞர் முகாம் நடைபெற்றது.



பயிற்சி முகாமில் இளைஞர்களின் ஆளுமை திறன் விருத்திக்கான
விரிவுரைகள் நடத்தப்பட்டதுடன், தீப்பாசறை இசையும் இரசனையும் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றது.

பயிற்சிகளின் நிறைவில் முகாமில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்யுவதிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கி
வைக்கப்பட்டது.

வாகரை பிரதேச இளைஞர்சேவை அதிகாரி MIM.பசில்
தலைமையில் ஞாயிறு  பிற்பகல் நடைபெற்ற சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கெளரவ கி.துரைராசசிங்கம், தமிழரசுக்கட்சியினுடைய இளைஞரனித்தலைவர் கி.சேயோன் ,கல்குடா தொகுதி இளைஞர்பாராளுன்ற. அமைச்சர் செல்வன் ஜெபக்குமார், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் ரி.சசிகுமார், தேசிய சம்மேளன பிரதிநிதி எஸ்.சத்தியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மூன்று தினங்களாக நடைபெற்ற இளைஞர்
முகாமில் பிரதேசத்தினைச்சேர்ந்த
நூற்றுக்குமேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து
கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.