தாந்தாமலையில் பிரதேச இளைஞர் முகாம் எதிர்வரும் வெள்ளி அன்று ஆரம்பம்.

(சசி துறையூர்) 

பட்டிப்பளை பிரதேச செயலார் பிரிவுக்குட்பட்ட இளைஞர்களுக்கான இளைஞர் முகாம் எதிர்வரும் 18.11.2016 வெள்ளிக்கிழமை பி.ப 04.00 மணிக்கு தாந்தாமலை முருகன் ஆலய அன்னதான மடத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பட்டிப்பளை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அமரசிங்கம் தயாசீலன் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

கொள்கைதிட்டமிடல் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் நிதி ஒதுக்கீட்டீல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்ற இளைஞர் யுவதிகளின் ஆளுமை தலைமைத்துவ விருத்திக்கான இளைஞர் பயிற்சி முகாம் பட்டிப்பளை பிரதேச  இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பிரதேச செயலாளர் திருமதி தெட்சணா கெளரி தினேஸ், மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் MLMN நைறூஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

விசேட அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட,  மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி யேசுதாஸ் கலாராணி, திருமதி நிஸாந்தி அருள்மொழி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 இந்த பயிற்சி முகாமில் 100இளைஞர் யுவதிகளுக்கு வதிவிடமாக மூன்று நாட்களுக்கு மென் திறன் விருத்தி , ஆளுமை விருத்திக்கான, செயன் முறையுடனான பயிற்சிகளுடன் வினைத்திறனுடன் கூடிய முடிவெடுத்தல், யோகாசனம் இசையும் இரசனைக்குமான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.