உளநல சமூக பிரச்சினைகள் தொடர்பான சமூக வலுவூட்டலுக்கான இரண்டு நாள் செயலமர்வு

(லியோன்)

வெற்றிகரமான வாழ்க்கைக்கு உளவளத்துணை என்ற நிகழ்ச்சியின்  கீழ் உளநல சமூக பிரச்சினைகள் தொடர்பான அரச அதிகாரிகளுக்கு சமூக வலுவூட்டலுக்கான  இரண்டு நாள் செயலமர்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது .


தேசிய சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உளவளத்துணை பிரிவின் ஒழுங்கமைப்பில்  அரச அலுவலக மற்றும் சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகளுக்கான  உளநல சமூக வலுவூட்டல் பிரச்சினைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 28  மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெற்றது .

இடம்பெற்ற தேசிய   சமூக வலுவூட்டல் தொடர்பான செயலமர்வில் கடந்த கால பிரச்சினைகள் மற்றும் எதிர்கால பிரச்சினைகளுக்கான தீர்வுகள்  மற்றும் எதிர்கால திட்டங்களுடன் இணைந்ததாக சுகாதாரம் , கல்வி , சமூகவியல், கலாசாரம் ,பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற தலைப்புகளுடனான கலந்துரையாடல்களும்  இந்த செயலமர்வு இடம்பெற்றது  

செயலமர்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா , தேசிய சமூக வலுவூட்டல் மற்றும் நலன்நோம்புகை அமைச்சின் தமிழ் பிரிவின் தேசிய இணைப்பாளர்  எம் ஜே . ரிவாத் , மட்டக்களப்பு மாவட்ட செயலக உளவளத்துணை இணைப்பாளர் கே .மதிவண்ணன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் கடம்பநாதன் ,காத்தான்குடி வைத்தியசாலை வைத்தியர் டேன் சௌந்தராஜன்  ,அரச திணைக்கள அதிகாரிகள் ,அதிபர்கள் ,ஆசிரியர்கள் , பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள் , சிவில அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,பிராந்திய சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகள், மாவட்ட செயலக உலவலத்துனையாளர் , மருத்துவ ,சமூகவியல் விரிவுரையாளர் ,நீதிமன்ற சமுதாய சார்   உளவளத்துணையாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்