முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மட்டக்களப்புக்கு விஜயம்

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமண தேரரின்  அழைப்பின் பேரில் மட்டக்களப்பு விஜயத்தை மேற்கொண்டு  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் பெயர்பலகையினை இன்று பிற்பகல் திறந்து வைத்தார் .

இதனை தொடர்ந்து விகாரையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள புத்த பெருமானுக்கு விளக்கேற்றப்பட்டு சமய வழிபாடுகள் இடம்பெற்றது.இதன்போது உயிர்நீர்த்த படையினருக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனை நடாத்தப்பட்டது.

இதனை  தொடர்ந்து மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமண தேரர் தெரிவிக்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நாங்கள் சொல்லென்னா துன்ப துயரங்களை  அனுபவித்து . விடுதலை புலி இயக்கங்களின் அனைத்து தாக்குதலுக்கும் முகம் கொடுத்து  , முப்படைகளின் சக்தியை மட்டும்  வைத்துக்கொண்டு இந்த விகாரையினை பாதுகாத்து முன்னுக்கு கொண்டு வந்தோம்.

ராணுவத்தின் இரத்த கரை படிந்த கைகளினால் .துன்பங்களை அனுபவித்து பாதுகாத்த இந்த விகாரையினை  நீங்கள் இன்று  திறந்து வைப்பது  மிக மகிழ்சிக்குரிய விடயம் என தெரித்தார் .

மங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமண தேரரின்  உரையை தொடர்ந்து சப்ரகமுவ பல்கலைக்கழக  உபபீடாதிபதி  பேராசிரியர் வஜிர தேரரின் தலைமையில் பௌத்த சமய வழிபாடுகள் நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பௌத்த விகாரைகளின் விகாராதிபதிகள் ,   அரசியல் வாதிகள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர் .