மதுவை ஒழித்து புது வாழ்வு கண்போம்


மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில்   ஒரு நாள் கருத்தரங்கு ஏறாவூரில்  இடம் பெற்றது.

 மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஏறாவூர் பற்று பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் வாழ்வின் எழுச்சி பயனாளிகளுக்கான மதுவை ஒழித்து புது வாழ்வு காண்போம் எனும் தொனிப்பொருளில் ஒரு நாள் கருத்தரங்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 2016.10.03ம் திகதி இடம் பெற்றது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி தலைமையக முகாமையாளர் திரு.ஜெயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வளவாலர்களாக திருமதி.அருட்சோதி அவர்களும் வைத்தியர் சிறிநாத்; அவர்களும் கலந்து கொண்டு கருத்தரங்கை நடாத்தினர்.

திருமதி.அருட்சோதி அவர்கள் ஆன்மீகம் மூலம் எவ்வாறு மதுவை முற்றாக கட்டுப்படுத்தி புதுவாழ்வை காண்பது பற்றி மிக சுவைபட கூறியதுடன், வைத்தியர் சிறிநாத் அவர்கள் மதுவால் உடலில் ஏற்படும் பாதிப்புக்கள், நோய்கள் பற்றி கூறியதுடன் அதிலிருந்து விடுபடுவதற்கான பல வழி முறைகளையும் கூறினார்.


 தகவல்
 பால.ஜெயதாசன்
வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர்
ஏறாவூர் பற்று