புனித மைக்கேல் நடைபவனியின்போது அனைவரையும் கவர்ந்த நிகழ்வு

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியினால் நடாத்தப்பட்ட நடைபவனியின்போது அனைவரையும் கவர்ந்த ஒரு நடைபவனி தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்றைய இயந்திர மனித வாழ்வில் தாய்ப்பாலின் மகத்துவம் தொடர்பில் அங்கு பிரஸ்தாபிக்கப்பட்டது வரவேற்கப்படவேண்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புட்டிப்பாலை தவிர்த்து தாய்ப்பாலை பருகுவோம்......

நிகரிலா இனிய சுவை - அது
அன்பின் அருமை மழை
தாய்மையின் அன்பருளால்
மழலை சுவைத்திடும் தாய்ப்பால்
உலகை வென்றாள உதித்த மொட்டின்
உடலை நோயாள அனுமதி மறுக்கும்
போசணை நிறைந்த அற்புதச் சீம்பால்
பாசத்தால் பொங்கும் அன்பின் தாய்ப்பால்
உடல் வளர போசாக்கு
உளம் வளர தாலாட்டு
பாலாய் மாறும் தாயின் செந்நீர்-மழலை
வாழ்வை வளமாக்கும்
அவசர உலகில் வேலைகள் கோடி
மழலை ஏங்கும் தாயன்பு தேடி
புட்டிப்பாலின் கலப்பட கலவை
கொதிக்கும் சூட்டில் அலறும் மழலை
அன்பு கலந்த தாய்ப்பால் எங்கே?
அவசரம் கலந்த புட்டிப்பால் எங்கே?
உண்மை அன்பின் தாய்ப்பால் ஊட்டி
மழலை வாழ்வை வளம் பெறச்செய்வீர்

(பழைய மாணவர்கள் சுகாதாரக்குழு)