மட்டக்களப்பு சிறைச்சாலை கைதிகளுக்கான கைத்தொழில் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

(லியோன்) 

சிறை கைதிகளின் குடும்ப வாழ்வாதாரத்தை
வளப்படுத்தும் வகையில்  கைதிகளுக்கான கைத்தொழில் பயிற்சிகள் மட்டக்களப்பு சிறைச்சாலையில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது .


மட்டக்களப்பு மாவட்ட சிறைச்சாலை கைதிகளின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் குடும்பம் சார்ந்த வாழ்வாதாரத்தையும் வளப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட பெறேன்டினா நிறுவனத்தினால்  தும்பை கொண்டு தயாரிக்க கூடிய தொழில் பயிற்சியினை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது  .

இந்த தொழில் பயிற்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்ட  பிரன்டினா நிறுவனத்தின் பிராந்திய முகாமையார்   எஸ் . தினேஷ்  ஏற்பாட்டில்  மட்டக்களப்பு  சிறைச்சாலை   பிரதம  ஜெயிலர்  என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு ,  , எச் . அக்பர்  தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .வியாலேந்திரன் மற்றும்  மட்டக்களப்பு சிறைச்சாலை  பிரதம புனர்வாழ்வு உத்தியோகத்தர் விக்கிரம சிங்க , சிறைக்கைதிகளின் நலன்புரிச் சங்க  உத்தியோகத்தர் பி. ஜி . டேவிட் , சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்தகொண்ட  பாராளுமன்ற உறுப்பினர்  இங்கு கருத்து தெரிவிக்கையில்  இந்த தொழில் பயிற்சி திட்டமானது  இரண்டரை இலட்சம் ரூபா  செலவில்  தும்பு கொண்டு செய்யக்கூடியதான தொழில்களை பயிற்றுவிக்கப்படவுள்ளது .

இத்துறையில் சிறப்பு தேர்ச்சிபெற்றவர்களை  கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு   இந்த தொழில் பயிற்சியின் மூலம் பெறப்படுகின்ற உற்பத்தி  பொருட்கள் வெளியில் விற்பனை செய்யப்பட்டு இதன் மூலம் பெறப்படுகின்ற  வருமானத்தில்  45 % வீதம்  கைதிகளின் வங்கி கணக்கில் வைக்கப்பட்டு அது  கைதிகளின் குடும்பத்திற்கும் , 45 % வீதம்   வருமானம் சிறைச்சாலை நலன்புரி சங்கத்திற்கும் மிகுதி பத்து வீதம் அரசாங்கத்திற்கும் வழங்கப்படவிருக்கின்றது . 

இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த பேரன்டினா நிறுவனத்தினருக்கும் ,  நிறுவனத்துடன் இணைந்து வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கின்ற மட்டக்களப்பு  சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு ,எச் .அக்பர் ,சிறைச்சாலை பிரதம ஜெயிலர் என் .பிரபாகரன் மற்றும் அதனுடன் இணைந்த அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள வேண்டும் .

மட்டக்களப்பு  மாவட்டத்தினுடைய மக்கள் பிரதிநி என்றவகையிலே இந்த சிறைச்சாலைக்குள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் இன்று தான் சிறைச்சாலையின் கட்டிட பகுதியின் பின்பகுதிகளை பார்க்க கூடிய சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது .

அநேகமான தொழில் வாய்ப்புக்களை சிறைச்சாலைக்குள் கைதிகளுக்காக கொண்டு வரும்பொழுது அந்த கைதிகள் இருந்து தொழிலை பழகுவதற்கான சரியான இடங்கள் இங்கு இல்லை .

நீண்ட கால கட்டிடங்களாக இருக்கின்றது , பல கட்டிடங்கள் சேதமடைந்து காணப்படுகின்றது . ஆகவே இந்த கட்டிடங்களை திருத்தி ,சிலதை புதிதாக உருவாக்கி கொடுக்க வேண்டிய பெரிய தேவைப்பாடு இங்கு இருக்கின்றது.

இது தொடர்பாக எங்களால் முடிந்த அளவும் ,மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசியும் இங்கு இருக்கின்ற சர்வதேச ,உள்நாட்டு நிறுவனங்களுடன் பேசியும் முடிந்தளவு அதற்கான குறைகளை நிவர்த்தி செய்து தருவேன் என தெரிவித்துக்கொண்டார்.