சிறுவர் தினத்தை முன்னிட்டு போதைவஸ்த்து தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்

(லியோன்)

சிறுவர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் செயலமர்வு  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .

 சர்வதேச  சிறுவர் தினத்தை முன்னிட்டு புளியந்தீவு மத்தி புழு மூன் (Blue moon)  சிறுவர் அபிவிருத்தி குழு மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து  எஸ்கோ நிறுவன நிதி அனுசரணையில் நடாத்தும் மதுபானம் மற்றும் போதைவஸ்த்து பாவனையால் ஏற்படும் உடல் உள ரீதியான பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும் , செயலமர்வும் புளியந்தீவு மத்தி கிராம சேவை உத்தியோகத்தரும் ,கிராம அபிவிருத்தி குழு தலைவருமான கே ஜெயந்திரன் தலைமையில் நடைபெற்றது .

இன்று காலை 09.00  மணியளவில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி அருகில் இருந்து ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை நடைபெற்றது .

இதனை தொடர்ந்து பிரதேச செயலக மண்டபத்தில் மதுபானம் மற்றும் போதைவஸ்த்து பாவனையால் ஏற்படும் உடல் உள ரீதியான பாதிப்புகள் தொடர்பான  செயலமர்வு நடைபெற்றது .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விதவராஜா , வளவாளர்களாக  மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வி . குகதாசன் ,கல்லடி விமோச்சனா இல்ல பணிப்பாளர் மற்றும் எஸ்கோ நிறுவன பிரதிநிதி  எஸ் .சிவா ,  மண்முனை வடக்கு பிரதேச செயலக  சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்  எஸ் .உதயராஜ் , வைத்தியர் ரமேஷ் ஜெயகுமார்  ,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , சிவில் குழு பொலிஸ் முத்தியோகத்தர்கள் , புனித மைக்கல் மற்றும் மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .