News Update :
Home » » ஜனநாயகத்திற்கு திரும்பிய பிள்ளையானை மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் சிறை அனுப்பியுள்ளது –மகிந்த ராஜபக்ஸ

ஜனநாயகத்திற்கு திரும்பிய பிள்ளையானை மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் சிறை அனுப்பியுள்ளது –மகிந்த ராஜபக்ஸ

Penulis : kirishnakumar on Tuesday, October 11, 2016 | 10:06 AM

பயங்கரவாதத்தை கைவிட்டு ஜனநாயகத்திற்கு வந்த முன்னாள் கிழக்கு முதலமைச்சர் பிள்ளையான் இந்த அரசாங்கத்தில் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் யுத்த வீரர்களின் நினைவு தூபியை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய அனைவரின் ஆத்மசாந்திக்காகவும் காமடைந்தவர்களுக்கு ஆசிவழங்கவும் ஏற்பாடுசெய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்வதில் மகிழ்சிசயடைகின்றேன்.
கொடிய யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க எம்மால் முடிந்தது.

காத்தான்குடி படுகொலை,இந்து மதகுரு சுட்டுக்கொல்லப்பட்டமை, அருந்தலாவiயில் இளம்பிக்குகள் சுட்டுக்கொல்லப்பட்டவை போன்ற சம்பவங்கள் நினைவுகூரும்போது இந்த கொடிய யுத்ததினால் பாதிக்கப்பட்டவர்கள்தமிழர்களாக இருக்கலாம்,சிங்களவர்களாக இருக்கலாம் முஸ்லிம்களாக இருக்கலாம் அவர்கள் அனைவரும் இந்த நாட்டுமக்களாகும்.

இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் இந்த யுத்ததினால் பெரும்பாதிப்புக்குள்ளாகியினர்.இளம் வயதினர் இந்த யுத்ததினால் உயிரிழக்கும் நிலையேற்பட்டது.இவையனைத்தையும் நிறுத்தி சுமூக நிலையை ஏற்படுத்திய போர் வீரர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன்கொண்டவர்களாகவுள்ளோம்.

ஒரு காலத்தில் கழுத்தில் சயனைட்டுகளை அணிந்தகொண்டிருந்த பிள்ளைகளுக்கு நாங்கள் கைகளில் பேனாக்களையும் கழுத்தில் பஞ்சாயுதத்தினையும் கொடுத்துள்ளோம்.எங்களது பிள்ளைகளுக்கு இழந்த கல்வியை கொடுக்க எங்களால் முடிந்தது.பல வருடங்களாக இந்த நாட்டில் உள்ள வடக்கு கிழக்கு தெற்கில் உள்ள பிள்ளைகளுக்கு கல்வியை சிரான முறையில் பெற்றுக்கொடுக்கமுடியாத நிலையிருந்தது.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் பல அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.யுதத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித கதியில் மீளகட்டியெழுப்ப முடிந்தது.

தற்போதுள்ள அரசியலமைப்பில் அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் நிலையுள்ளது.ஏதாவது திருத்தம் தேவையென்றால் அதனை செய்யக்கூடிய நிலையுள்ளது.ஆனால் இன்று இந்த நாட்டினை இரண்டாக உடைக்க சிலர் முயற்சி செய்துவருகின்றனர்.இன்னும் சிலர் வடகிழக்கினை இணைத்து ஒரு அலகாக்கவேண்டும் என்கிறன்னர்.இன்னும் ஒரு பகுதியினர் தற்போதுள்ளவாறே இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர்.சிலர் தனித்துச்சென்று தனி இராஜியம் உருவாக்கவேண்டும் என்கின்றனர்.இதற்கு அடிபணிந்தால் ஒன்றுபட்ட இனங்கள் சிதறிவிடும் நிலையேற்படும்.மீண்டும் பகைமையுனர்வு ஏற்படும் நிலையேற்படும்.

இந்த நிலைமையேற்பட்டால் நாட்டில் கட்டியெழுப்ப முற்படும் நல்லிணக்கம் இல்லாமல்போய்விடும் நிலையேற்படும்.இந்த அரசாங்கம் மேற்கொண்டுவரும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு புதிய அரசியலமைப்பு பாதிப்பினை ஏற்படுத்தலாம்.

புதிய அரசியல்யாப்பினை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றமுடியும் என்று கூறுகின்றார்கள.பாராளுமன்றத்தின் அங்கிகாரத்துடன் நிறைவேற்றலாம் என்று நினைப்பது பிழையாகும்.இவற்றிக்கு இடமளிக்கமுடியுமா என்பதே இன்று நாட்டில் எழுந்துள்ள கேள்வியாகும்.

நாட்டில் இன்று மிகமோசமான அடக்குமுறை காணப்படுகின்றது.நான் கூறுவதை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதில்லை.துண்டுதுண்டாக போடுகின்றனர்.ஆளும் கட்சிக்குள்ள முறைகேடுகள்,பிரச்சினைகளை வெளியில் வராமல் தடுக்கப்படுகின்றது.பயம் காரணமாகவே இவ்வாறு செய்யப்படுகின்றதுஊடகங்கள் வரும் செய்திகளுக்கு ஜனாதிபதி செயலகம்,பிரதமர் செயலகங்கள் ஊடாக தனிக்கைசெய்யப்படுகின்றது.

ஊடக அடக்குமுறை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு எல்லாம் செய்துவிட்டு
தற்போதுதான் ஊடக சுதந்திரம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறுகின்றார்கள்.இந்த நாடு சிலரின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் ஏகாதிபத்தியத்தினை நோக்கி சென்றுகொண்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 16ஆசனங்களும் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆறு ஆசனங்களும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு 52 ஆசனங்களும் உள்ளது.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி சம்பந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் கொறடா பதவி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இன்று நாட்டைபற்றி கதைப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு 52 ஆசனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு கதைப்பதற்கு போதிய நேரம் ஒதுக்கப்படுவதில்லை.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை ஜனநாயகத்திற்கு ஏற்றதா இல்லையா என்பதை மக்களே தீர்மானிக்கவேண்டும்.நாளாந்தம் நிதி குற்றப்புலனாய்வுப்பிரிவு விசாரணைக்கு அழைத்து அடக்கு முறையினை பலப்படுத்துகின்றனர்.தங்களுக்கு எதிரானவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புகின்றனர்,நிதி மோசடி குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு அனுப்புகின்றனர்.போர் வீரர்களை சிறைச்சாலை உணவு உண்ணும் நிலையை ஏற்படுத்துகின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது பயங்கரவாதத்திற்கு எதிராகவே.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை புனர்வாழ்வு அளித்து விடுதலைசெய்துள்ளோம்.இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் நிலைமையேற்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகளில் இருந்து ஜனநாயகத்திற்கு வந்து முதலமைச்சராக இருந்த பிள்ளையான் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறைச்சாலை உணவு உண்ணுகின்றார்.பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது சுதந்திரமாக நடமாடும் நிலையேற்பட்டுள்ளது.இது தொடர்பில் சிந்திக்கும் காலம் வந்துள்ளது.

இந்த பிரச்சினை தமிழர்களுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்குமட்;டுமுள்ள பிரச்சினையல்ல.அனைவருக்கும் பொதுவாக உள்ள பிரச்சினை.அனைவரும் ஒன்றுபட்டு செயல்படும் காலமேற்பட்டுள்ளது.அதன் மூலமே தற்போதுள்ள ஏகாதிபத்திய சக்திகளை முறியடிக்கவேண்டியுள்ளது.


Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger