மட்டக்களப்பில் வித்தியாரம்ப நிகழ்வில் நடனப்பள்ளி ஆரம்பித்துவைப்பு

நவராத்திரி தினத்தின் இறுதி தினமான இன்று பல்வேறு பகுதிகளிலும் விஜயதசமியை முன்னிட்டு வித்தியாரம்ப நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்கள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் நடனப்பள்ளி ஆரம்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் முதன்முறையாக நவராத்திரி தினத்தின் விஜயதசமி; தினத்தில் இந்த “கணேஷாலயா” நடனப்பள்ளி என்னும் பெயரில் இந்த நிலையம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி மாணவர்களின் நடனத்திறமையினை மேம்படுத்தும் வகையில் நாட்டிய பட்டதாரியான திருமதி பிரசன்யா சுரேஸினால் இந்த நாட்டியபள்ளி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வானது பெரியகல்லாறு சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் தலைவரும் சமூகசேவையாளருமான மூ.மன்மதராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலய தலைவரும் அதிபருமான சி.பேரின்பராஜா உட்பட பாடசாலை அதிபர்கள்,மாணவர்கள் பெற்றோர் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நடன வகுப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான வித்தியாரம்ப நிகழ்வுகள் நடைபெற்றதுடன் விசேட பூஜைகளும் நடைபெற்றன.

இந்த நாட்டியப ள்ளியில் தமது பிள்ளைகளையும் இணைக்க விரும்புவோர் 0672050275 என்னும் தொலைபேசி இலக்கம் மூலம் தொடர்புகொள்ளமுடியும்.களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என அதன் ஸ்தாபர் பிரசன்யா சுரேஸ் தெரிவித்தார்.