கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு

(லியோன்)

கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய  ஆசிரியர் தின விழாவும் , கல்லூரி ஸ்தாபகர்களின் சிலை திறப்பு நிகழ்வும் இன்று கல்லூரியில் நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய ஆசிரியர் தின விழாவும் , கல்லூரி ஸ்தாபகர்களின் சிலை திறப்பு நிகழ்வும் இன்று மட்டக்களப்பு கல்லடி விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயத்தில்  அதிபர் திருமதி ஹரிதாஸ் தலைமையில் கல்லூரியில் நடைபெற்றது

ஆரம்ப நிகழ்வாக நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளையும் ,ஆசிரியர்களையும்  ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டனர் .

 இதனை தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள  இப்  பாடசாலை தாபகர்களான  .க .கதிர்காமத்  தம்பி  உடையார் மற்றும் கு .சபாபதிப்  பிள்ளை உடையார் ஆகியோரின் உருவ சிலைகள் குடும்ப  உறவினர்களினால் திறந்து வைக்கப்பட்டது .
 

தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகளும் , ஆசிரியர்களின் கௌரவிப்பு  நிகழ்வும் நடைபெற்றது .


இந்நிகழ்வில் கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமீ  பிரபு பிரேமானந்தஜி மகராஜ் , மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம் .உதயகுமார் , மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வி .லவக்குமார் , மற்றும் கல்லூரி ஸ்தாபர்களின் குடும்ப உறுப்பினர்கள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்