ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கான மூன்றாம் கட்ட மூன்று நாள் செயலமர்வு

 (லியோன்)

மண்முனை மேற்கு கல்வி வலய ஆசிரியர்களுக்கான  மூன்றாம் கட்ட மூன்று நாள் செயலமர்வு  மட்டக்களப்பு நாவலடியில் இன்று ஆரம்பமானது
.

நியுசிலாந்து சயில்ட் பாவுன்ட் நிறுவன நிதி அனுசரணையில்  வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட  தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையிலான ஆரம்பப் பிரிவு  ஆசிரியர்களுக்கு   மூன்றாம் கட்ட மூன்று நாள்   செயலமர்வு     வவுணதீவு அபிவிருத்தி நிறுவன  திட்ட முகாமையாளர் எல் .ஆர் .  டிலிமா தலைமையில் மட்டக்களப்பு  நாவலடி சன்ரைஸ் விடுதியில் இன்று   ஆரம்பமானது  .

ஆசிரியர்களுக்கான மூன்றாம் கட்ட  செயலமர்வில்  ஆசிரியர்களின் வினைத்திறன் மிக்க கற்பித்தலை ஊக்குவிக்கும்  நோக்கில்  பயிற்சிகள்  வழங்கப்படுகின்றது  


இதன் ஆரம்ப முதல்  நாள்  நிகழ்வில்  நியுசிலாந்து சயில்ட் பாவுன்ட் நிறுவன  பணிப்பாளர்களான  நட்டாசா லுவிஸ் , கரிஸ் நிட்டல் , மைக்கல் பிரசாத் , ஜோன்  ஹொலி , இலங்கைக்கான சயில்ட் பாவுன்ட் நிறுவன திட்ட பணிப்பாளர்  நாலக்க  , மண்முனை மேற்கு வலய பிரதி கல்விப் கல்விப்பணிப்பாளர்  சுரநிதன் ,  கோட்டக்கல்வி அதிகாரி எஸ் . சோமசுந்தரம் ,வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட  இணைப்பாளர்  ஜெகன் ராஜரட்ணம் , சிறிலங்கா சயில்ட் பாவுன்ட்  எட்லஸ் திட்ட உதவியாளர்   ஆர் .சுஜாதா , வளவாளர்களான  ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஆலோசகர்  லோகேஸ்வரன் , ஆரம்பக்கல்வி  ஆசிரியர்  திருமதி எம் . தேவதாசன்  மற்றும்  மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட     ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர்