மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் கலைச்சங்கமம் நிகழ்வு

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலைச் சங்கமம் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் வழிகாட்டலில் திருமதி வளர்மதி ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் இன்று (7) வெள்ளிக்கிழமை ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தமிழ் முஸ்லிம் மாணவர்களுக்கிடையே நல்லுறவினை ஏற்படுத்துமுகமாகவும் தத்தமது கலை கலாசாரத்தினையும் வெளிப்படுத்துவதற்குமாகவும் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கரகம், கும்மி, கோலாட்டம், கசிதா மற்றும் நாட்டார் நடனம் என்பன மாணவர்களினால் அரங்கேற்றப்பட்டதுடன் பார்வையாளர்களின் பெரும் வரவேற்பினையும் பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி லக்ஷன்யா பிரசந்தன் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

இந்த நிகழ்வின்போது தமது கலைகலாசார பண்பாடுகளை கலைகளாக வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன