தகுந்த சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் குற்றவாளிகள் இருவர் விடுதலை

(லியோன்)

குற்றவாளிகளாக  நீண்ட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவர் தகுந்த சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைய விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

  
சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்படுகின்ற  வழக்குகள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியினால்  விரைவுபடுத்தப்பட்டு முடிவுறுத்தப்படுகின்றன .

இதற்கு அமைய நீண்ட காலமாக குற்றவாளிகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  இருவர் நேற்று  மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவின் உத்தரவுக்கு அமைய (நேற்று) 12.10.2016 புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

2014  ஆம் ஆண்டிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிவுறுத்தல் பெறப்படாது இருந்த இரண்டு வழக்குகள் தொடர்பில் சட்டமா அதிபர்  திணைக்களத்தில் அறிக்கையை விரைவில் சமர்ப்பிப்பதற்கு  மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா எடுத்த எழுத்து மூலமான நடவடிக்கைக்கு அமைவாக யுவதி ஒருவரை கடத்தியத்திய சம்பவத்துடன் கைதுசெய்யப்பட்ட ஒருவரும்  மற்றும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஒருவரும்  குற்றவாளிகளாக நீண்ட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில்  (ஆறுமுகம் பிரகாஷ் மற்றும்  பகீர் முகைதீன் ) இருவரின்  வழக்குகள் தகுந்த சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் சட்டமா  அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக  விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறான  சாட்சியங்கள் இல்லாத பல  வழக்குகள் மட்டக்களப்பு நீதவான்  நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்  கனேசராஜாவினால் மேற்கொள்ளப்படுகின்ற  நடவடிக்கையின் மூலம்  சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விரைவுப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .