மட்டக்களப்பு அருணோதய வித்தியாலய மாணவி மாவட்டத்திலும் , வலய மட்டத்திலும் சாதனை

 (லியோன்)

மட்டக்களப்பு அருணோதய வித்தியாலய  மாணவி 186  புள்ளிகளைப் பெற்று  மாவட்டத்தில் 3ம் இடத்தினையும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று சாதனை.படைத்துள்ளனர்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில்  .மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கல்வி கோட்டத்தில் முதல் முறையாக  254 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இவ்வருடம் அதிகளவான  மாணவர்கள் சித்தியடைந்துள்ள முதல்  கல்விக் கோட்டம்  மண்முனை வடக்கு சாதனை படைத்துள்ளதாக  வலயக்கல்வி அலுவலக அறிக்கைகள் தெரிவிக்கின்றன . .

இதற்கு அமைய முதல் முறையாக மட்டக்களப்பு அருணோதய வித்தியாலயத்தில்  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தோற்றிய மாணவர்களில்  மாணவி சுபாகரன் கிஷோதிகா 186  புள்ளிகளைப் பெற்று  மாவட்டத்தில் 3ம் இடத்தினையும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார் .

வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்ப பின்னணியாக கொண்டுள்ள மாணவர்கள்  கல்வி பயிலும் இப்பாடசாலையில் மேலும் 8  மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இப்பாடசாலையானது கடந்த கால அசாதாரண  காலப்பகுதியின் பின்  புனரமைக்கப்பட்டு பின்தங்கிய நிலையில் வள பற்றாக்குறையுடன் இயங்கி வந்த நிலையில்  இப்பாடசாலையில்  மாணவர்கள்  முதல் முறையாக மாணவர்கள் 2016 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு  தோற்றியுள்ளதுடன்  புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்துள்ளனர்


இந்நிலையில் மட்டக்களப்பு அருணோதய வித்தியாலய  மாணவி சுபாகரன் கிஷோதிகா  186  புள்ளிகளைப் பெற்று  மாவட்டத்தில் 3ம் இடத்தினையும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று தனது பாடசாலைக்கும் கற்பித்த ஆசிரியர்கள் , அதிபர் மற்றும் தமது பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார் .

இதேவேளை மட்டக்களப்பு அருணோதய வித்தியாலய  மாணவியும் மற்றும் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவி ஒருவரும் 186  புள்ளிகளைப் பெற்று  மாவட்டத்தில் 3ம் இடத்தினையும் வலய மட்டத்தில் முதலாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது .