தொற்றாநோய்கள் தொடர்பாக அலுவலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு

(லியோன்)

தொற்றாநோய்கள் மற்றும்  வாழ்க்கையின் பயணம் தொடர்பான கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

 மட்டக்களப்பு பிராந்திய சுகாதார  சேவைகள் பணிமனை மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் தொற்றாநோய்கள் மற்றும்  வாழ்க்கையின் பயணம் தொடர்பாக மண்முனை வடக்கு அலுவலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது .  

அண்மை காலமாக பல்வேறுவிதமான நோய்கள் எமது சமுதாயத்தின் மத்தியிலே உருவாக்கி வருகின்றது . அது எங்களுடைய வாழ்க்கை பயணத்தை  எவ்வாறு நடத்திக்கொண்டு இருக்கின்றது , இந்த தொற்றாநோய்கள் வருவதற்கு  காரணம்    தொடர்பாக சமுதாயத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தில் சமூக மட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்காக நடைபெற்றது .

இந்த   கருத்தரங்கில் வளவாளராக  மாவட்ட தொற்றாநோய் வைத்திய அதிகாரி  வைத்தியர்  ஆர் . நவலோஜிதன்  மற்றும் கருத்தரங்கில்  மண்முனை வடக்கு பிரதேச செயலக  வாழ்வின் எழுச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , பொருளாதார அபிவிருத்தி  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .