நீதி மன்ற பொலிசார் மற்றும் சட்டத்தரணிகள் மக்களுடனான சுமுக உறவுகள் தொடர்பான கலந்துரையாடல்

(லியோன்)  

மட்டக்களப்பு  12  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ்  நிலைய அதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் மட்டக்களப்பு திறந்த நீதிமன்ற மண்டபத்தில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்ட நீதி மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  12 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ்  நிலைய அதிகளுக்கிடையிலான கலந்துரையாடல்  மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி   மாணிக்கவாசகர் கணேசராஜா தலைமையில் 05.10.2016 புதன்கிழமை மட்டக்களப்பு திறந்த நீதிமன்ற கட்டிட பகுதியில் நடைபெற்றது .

நடைபெற்ற கலந்துரையாடலில் சந்தேக நபர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகள் நிறைவேற்றல் , போக்குவரத்து விதிகளை மீறுவோர் , கசிப்பு  ,சாராயம்  , போதைவஸ்து ,போன்ற பிரச்சினைகளில் சம்பந்தபடுவோர் மீதி கடுமையாக சட்ட நடவைக்கைகளை எடுத்தல் ,முறைப்பாடுகளை  உடனடியாகவும் , தமிழ் மொழி மூலம் பெற்றுக்கொள்ளல் , தகுதிவாய்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றுக்கு  வழக்கு நடத்துவதற்கு அனுப்புதல் , கடுமையான தண்டனைகள்  , உயர்ந்த பட்ச தண்டப்பணம்  மூலம் குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கை எடுத்தல் தொடர்பாகவும் ,  பொலிசார் , நீதிமன்ற சட்டத்தரணிகள் மக்கள் தொடர்பில் சுமுகமான உறவுகளை பேணுதல் தொடர்பாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது . 

இந்த கலந்துரையாடலில் நீதிமன்ற பதிவாளர் , உதவி ஆணைக்குழு சட்டத்தரணிகள் , சமுதாயச்சார் சீர்திருத்த பிரிவு உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு  12  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ்  நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .