தசாப்தம் காணும் Battil of batti சமர் 15ம் 16ம் திகதிகளில்…..

மட்டுநகரில் சுமார் 40 வருடகாலமாக விளையாட்டு துறையில் முன்னனி வகிக்கும் விளையாட்டு கழகங்களாக கோட்டைமுனை விளையாட்டு கழகமும், சிவானந்தா விளையாட்டு கழகமும் திகழ்ந்து வருகின்றது. இக்கழகங்களில் இருந்து தமது திறமையை வெளிக்கொணர்ந்த பல வீரர்கள் தற்போது இலங்கையிலும் புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் உயர்பதவிகளை வகிப்பதை நாம் அவதானிக்க கூடியதாகவும் உள்ளது.

இவ்விரு கழகங்களும் தங்களிடையே இருக்கும் உறவை நட்பு ரீதியாக எப்பொழுதும் ஒரு ஒன்றிப்பான கழகங்களாக செயற்பட்டு வருகின்றது.
இந்த நட்பின் செயற்பாடாகவே சிவானந்தா விளையாட்டு கழகமும் கோட்டைமுனை விளையாட்டு கழகமும், சினேகபூர்வமான ஒரு கடின பந்து கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்து வருடந்தோரும் மிக சிறப்பாக நடாத்தி வருகின்றது.

இதன் முதல் போட்டிhனது கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்றது. இந்த நட்பு ரீதிhன கிரிக்கெட் போட்டிக்கு மட்டுநகரை முதன்னிலைப்படுத்தி ஒரு பெயர் வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணியவுடன் அதற்கு சூட்டப்பட்ட நாமம் தான் டீயவவடந ழக டீயவவi ஆகும்.

2006ம் ஆண்டு நடைபெற்ற முதல் தொடருக்கு தலைவர்களாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கு எப்.எஸ்.லோப்பஸ், சிவானந்தா விளையாட்டு கழகத்திற்கு அமரர்.ரீ.தனபால் அவர்களும் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்க விடயமாகும். இச்சமர் சமநிலையில் முடிவுற்றதுடன் தொடரின்; ஆட்டநாயகனாக சிவானந்தா விளையாட்டு கழக வீரர் அமரர்.தனபால் தெரிவு செய்யப்பட்டார்.

2007ம் ஆண்டு நடைபெற்ற  இரண்டாம் தொடருக்கு தலைவர்களாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கு எம்.டீ.அவுஸ்கோன் அவர்களும், சிவானந்தா விளையாட்டு கழகத்திற்கு பீ.கஜேந்திரன்; அவர்களும் தலைமைதாங்கியதுடன், இச்சமர் சமநிலையில் முடிவுற்றதுடன் தொடர் ஆட்டநாயகனாக சிவானந்தா விளையாட்டு கழக வீரர் என்.செந்தூரன்; தெரிவு செய்யப்பட்டார்.


இவ்வாறாக வருடாவருடம் நடைபெற்றுவந்த போட்டிகளைத் தொடர்ந்து கடந்த வருடமும் 2015ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாம் தொடருக்கு தலைவர்களாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கு எஸ்.லஜிகுமார , சிவானந்தா விளையாட்டு கழகத்திற்கு ஜீ.ஜெனிசியஸ் ஆகியோர் தலைமைதாங்கியது இச்சமரை முதல் தடவையாக கோட்டைமுனை விளையாட்டு கழகம் 8 சமருக்கு பின் தொடரை கைப்பற்றி; ஒரு வரலாற்று சாதனை படைத்தது தொடருக்கான ஆட்டநாயகனாக சிவானந்தா விளையாட்டு கழக வீரர் ஆர்.பிரசாத்; தெரிவு செய்யப்பட்டார்

கோட்டைமுனை விளையாட்டு கழகம்  - 1970ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் அக்காலத்தில் கோட்டைமுனை மகா வித்தியாலத்தில் கல்வி பயின்ற மாணவர்களால் உருவாக்கப்பட்ட கழகம் தான் கோட்டைமுனை விளையாட்டு கழகம். கிரிக்கெட் விளையாட்டையே பிரதானமாக கொhண்ட இக்ககழகம் பிற்காலத்தில் உதைபந்தாட்டம், மெய்வல்லுனர் போட்டிகளில் பிரகாசித்து சாதனை படைத்து வந்துள்ளது. 2016ல் நடைபெற இருக்கும் சமருக்கு கடந்த வருடம்; அணி தலைவராக செயற்பட்ட எஸ்.லஜிகுமார  தலமைதாங்கி வழிநடத்தவுள்ளார்.

இக்கழக வீரர்களை பொறுத்த வரை துடுப்பாட்டத்தில் வினோhதன், அஸ்லீ. வினோதன், தனுசன் போன்றோரை குறிப்பிடலாம் அணித்தலைவர் லஜிகுமார துடுப்பாட்ட வீரராகவும், விக்கெட்காப்பாளராகவும் செய்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும். சகலதுறை ஆட்டக்காரர் டெனிக் அவர்களையும், தேனுரதன் அவர்களையும்  கோட்டைமுனை விளையாட்டு கழகம் நம்பியுள்ளது. Nதுனுரதன் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும் கிழக்கு மாகான அணிக்கு தலைமை தாங்கிய மட்டக்களப்பின் முதல் வீரர் ஆவார் இவர் தற்போது தமது திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டு வருவது குpப்பிடத்தக்க விடயம்.

பந்து வீச்சில் அன்மை காலங்களில் பிரகாசித்துவரும் இளம் பந்து சுழல் பந்துவீச்சாளரான டிலக்சன் அவர்களை நம்பியுள்ளது. வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை  சாருஜன் மற்றும் அனுபவசாலியான யதுகரன் ஆகியோரையும்; கோட்டைமுனை விளையாட்டு கழகம் பெரிதும் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். இம்முறை தாம் இரண்டாம் தடவையாக வெற்றி கொண்டு கின்னத்தை தனதாக்கி கொள்வதற்கான சகல முயற்ச்சிகளையும் மேற்கொள்வதாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் பயிற்றுவிப்பாளரும், முகாமையாளருமான லோப்பஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சிவானந்தா விளையாட்டு கழகம் - 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் சிவானந்தா தேசிய பாடசாலை வீரர்களையே பிரதானமாக கொண்டு செயற்பட்டு வரும் ஒரு கழகமாகும். ஆரம்ப காலங்களில் உதைபந்தாட்டத்தில் தம்மை நிலை நிறுத்தினாலும் பிற்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்கும் முன்னுரிமை வழங்கி வந்துள்ளதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இச்சமரில் கலந்து கொள்ளும் அணிக்கு தலைவராக சு.சஞ்சீவன் அவர்கள் தலைமை பொறுப்பை ஏற்று வழிநடாத்தவுள்ளார்.

இக்கழக வீரர்களை பொறுத்த வரை 9வது தடவையாக இப்போட்டியில் கலந்து கொள்ளும் அனுபவ வீரரான தவகீசனை இக்கழகம் நம்பியுள்ளது, துடுப்பாட்டத்தில் தனக்கே உரிய பாணில்  பிரகாசித்து வரும் அனுசன்; விரைவாக ஓட்டம் பெறக்கூடிய பிரசாத் மற்றும் ஜினேந்திரா போன்றோரை குறிப்பிடலாம் பந்து வீச்சில் அனுபவ வீரரான சுழல் பந்து வீச்சாளர் கனிஸ்டனை சிவானந்தா விiளாட்டு கழகம் முழுமையாக நம்பியுள்ளதக அணியின் பயிற்சியாளர் திரு.வு.டிசாந்; தெரிவித்துள்ளார்.

இம்முறை வீரர்கள் மிக உற்சாகத்துடன் இருப்பதுடன் புதிய வீரர்களை இணைத்துக் கொண்டதுடன் அனுபவ வீரர்களும் உள்வாங்கப்படுவதால் இவ்வருடம் இச்சமரை வெற்றி கொள்வது உறுதி என அணியின் முகமையாளர் ரீ.ஜெகன் தெரிவித்துள்ளார்.

தற்போது இத்தொடர் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தில் இருந்து மறைந்த அமரர்.பிரகாஸ் அவர்களின் ஞாபகார்த்தமாகவும், சிவானந்தா விளையாட்டு கழகத்தில் இருந்து மறைந்த அமரர்.தனபால் அவர்களின் ஞாபகாத்தமாகவும் நடைபெற்று வருகின்றது.