சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கை

 (லியோன்)


தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக  நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு  சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


இதற்கு அமைவாக  தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பாடசாலை மட்டத்திலும்  மாணவர்கள் டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு    நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் .

இதன் கீழ் இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய பிரதி அதிபர் எம் .பகிரதன் வழிகாட்டலின்  வித்தியாலய சுகாதார பாட ஆசிரியர் திருமதி பிரசாந்தினி கெஸ்வரன்  ஒழுங்கமைப்பில் வித்தியாலய அதிபர் கே . சிறிதரன் தலைமையில் வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து   சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு  ஊர்வலத்தை மேற்கொண்டனர் .


இதனை தொடர்ந்து மயிலம்பாவெளி விநாயகர் ஆலய வளாகத்தில் சிரமதான பணிகள் நடைபெற்றது .  இந்நிகழ்வுகளில் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களை கலந்துகொண்டனர் .