சிறுவர்களின் போசாக்கு குறிகாட்டிகள் அளவிடுவதன் முக்கியத்துவ வழிகாட்டல் பயிற்சி

(லியோன்)

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போசாக்கு வழிகாட்டல் விழிப்பூட்டல் கருத்தரங்கு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான போசாக்கு வழிகாட்டல்  தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பிள்ளைப் பருவ  உத்தியோகத்தர்  டி .மேகராஜ் ஒழுங்கமைப்பில்  பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது .

இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கில் பிள்ளையின் உடல் நிறை குறியீட்டென் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம், சிறுவர்களின் போசாக்கு குறிகாட்டிகள் அளவிடுவதன் பிரயோக ரீதியான நடைமுறைகள் ,முன்பிள்ளைப்பருவ சிறார்களுக்கு கொடுக்கின்ற இலகுவாக தயாரிக்க கூடிய நிறையுணவு போன்ற முன்பள்ளி சிறுவர்களுக்கான போசாக்கு வழிகாட்டல் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டது . 

இந்நிகழ்வில் விரிவுரையாளராக  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை உதவி சுகாதார வைத்தியர் திருமதி . கீர்த்திகா மதனழகன்  மற்றும்  பொது சுகாதார தாதிய உத்தியோகத்தர்  ஜீவமலர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .