மாநகர சபையால் சகல வட்டாரங்களுக்கான வருமான நிலுவைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்

லியோன்)


இலங்கையில் வருடாந்தம் ஒக்டோபர் மாதம்  உள்ளூராச்சி மாகாண சபைகள் அமைத்து உள்ளூராச்சி வாரம் எனும் தொனிப்பொருளில்  உள்ளூராச்சி சபைகளின் இயல்பை வலுப்படுத்தம்  பல்வேறு வேலைத்திட்டங்கள்  நடைமுறைப் படுத்தப்படுகின்றன
இதற்கு அமைவாக  ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல்  “நகர் வலம்” எனும் தொனிப்பொருளில் உள்ளூராச்சி மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையால்  சகல வட்டாரங்களுக்கான வருமான நிலுவைகளை சேகரிக்கும் வேலைத்திட்டம்  ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த “நகர் வலம்” எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாநகர சபையால்  நடாத்தப்படும் வருமான நிலுவைகளை சேகரிக்கும் வேலைத்திட்டங்கள்  தொடர்பாக  பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் தலைமையில் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது ,  


இந்த கலந்துரையாடல் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர  உதவி ஆணையாளர் என் .தனஞ்சயன் , மாநகர சபை கணக்காளர்  ஜோன் பிள்ளை , பொறியலாளர் . தேவதீபன் , செயலாளர் திருமதி . றிப்கா சபீன் , மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் ,கிராம சேவை உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்  மற்றும் பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர் .