தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

(லியோன்)

பாடசாலை மாணவர்களுக்கான தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு  மட்டக்களப்பில் நடைபெறுகின்றது
.இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம் கல்வி அமைச்சுடன் இணைந்து தேசத்தின் தகவல் தொழிநுட்ப துரையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பாடசாலை மட்டத்தில் தகவல் மற்றும் தொழிநுட்ப  வர்த்தக முகாமைத்துவ செயற்பாட்டு செயலமர்வுகளை நடத்திவருகின்றது .

இதன் கீழ்  தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப  வர்த்தக முகாமைத்துவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு நாள் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு   மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் நடைபெற்றது .


இந்த செயலமர்வில்  தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பாட நெறியினை கற்கும்  மட்டக்களப்பு மாவட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர் .