ஆசிரியர்களின் வினைத்திறன் மிக்க கற்பித்தலை ஊக்குவித்தல் பயிற்சி பட்டறை

(லியோன்)

மண்முனை மேற்கு கல்வி வலய ஆசிரியர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு  மட்டக்களப்பு நாவலடியில்  நடைபெறுகின்றது
.மட்டக்களப்பு மாவட்ட சயில்ட் பாவுன்ட் நிறுவன நிதி அனுசரணையில்  வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ஆசிரியர்களுக்கான மூன்று நாள்   செயலமர்வு மாவட்ட சயில்ட் பாவுன்ட் நிறுவன  திட்ட முகாமையாளர் பேனாட் பிரகாஸ்  தலைமையில் மட்டக்களப்பு  நாவலடி சன்ரைஸ் விடுதியில்  நடைபெறுகின்றது .

இந்த மூன்று நாள் நடைபெறுகின்ற செயலமர்வில் முன்பள்ளி  ஆசிரியர்களின் வினைத்திறன் மிக்க கற்பித்தலை ஊக்குவிக்கும்  நோக்கில்  பயிற்சிகள்  வழங்கப்படுகின்றது  

இதில் மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட   120   முன்பள்ளி   ஆசிரியர்கள்  கலந்துகொண்டுள்ளனர் . 

இதன் ஆரம்ப முதல்  நாள்  நிகழ்வில் மண்முனை மேற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் கே . சத்தியநாதன் ,  கோட்டக்கல்வி அதிகாரி எஸ் . சோமசுந்தரம் ,வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர் எல் .ஆர் . டி .லிமா , வவுணதீவு அபிவிருத்தி நிறுவன திட்ட              இணைப்பாளர் ஜெகநாதன் , மட்டக்களப்பு சயில்ட் பாவுன்ட் நிறுவன திட்ட உத்தியோகத்தர்  என் .சுஜாதா , ஆசிரியர் ஆலோசகர்களான , குமாரலிங்கம் , ரவிச்சந்திரன்  மற்றும் வளவாளர் திருமதி .என் .தேவதாசன்  ஆகியோர் கலந்துகொண்டனர்





 .