மண்முனை வடக்கு மாணவர்களின் கல்விக்கான சிப்தொற புலமைப்பரிசில்

(லியோன்)

வாழ்வின் எழுச்சி  சிப்தொற திட்டமானது  நாடு பூராவும் உள்ள  வாழ்வின் எழுச்சி உதவி பெறும் குடும்பங்களிலுள்ள திறமையான பிள்ளைகளின் கல்விப் பொது சாதாரண தரத்தில் இருந்து கல்விப் பொது உயர் தரம் வரையிலான கல்வியினை கற்பதற்கான மாதாந்த புலமைப் பரிசில் உதவி தொகை வழங்கும் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது .


இந்த திட்டத்தின் நிதி உதவியினை  சமூக பாதுகாப்பு நிதியத்தினூடாக சமுர்த்தி பயனாளிகளின் பாடசாலை மாணவர்களுக்கு  வழங்குவதற்கான நேர்முக தேர்வுகள் நடைபெற்று வருகின்றது .

இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பாடசாலைகளில் வாழ்வின் எழுச்சி உதவி பெறும் குடும்பங்களிலுள்ள திறமையான மாணவர்களுக்கு கல்விக்கான சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நேர்முக தேர்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி . தவராஜா தலைமையில் பிரதேச செயலகத்தில் இன்று நடைப்பெற்றது .


சிப்தொற புலமைப்பரிசில்  நேர்முக தேர்வு உத்தியோகத்தர்களாக மண்முனை வடக்கு பிரதேச செயலக திவிநெகும முகாமைத்துவ பணிப்பாளர்  திருமதி . என் . கிரிதராஜா , தலைமையக முகாமையாளர் திருமதி . கே . வாமதேவன், பிரதேச செயலக திவிநெகும உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .