மட்டக்களப்பு இலங்கை வங்கியின் 77 வருட நிறைவை சிறப்பிக்கும் விசேட நிகழ்வு

(லியோன்)

இலங்கை வங்கியின் 77 வருட நிறைவை சிறப்பிக்கும் விசேட நிகழ்வு    இன்று மட்டக்களப்பு மேற்தர வங்கி கிளையில் நடைபெற்றது

உலகில் வட்டி செட்டியார்களின் ஒரு முதலாளித்துவ போக்கிலிருந்து சாதாரண மக்களை நிதித்துறையில் விடுவிப்பதற்காக இலங்கையில் சிறு வங்கியாக தோற்றுவிக்கப்பட்ட  இந்த வங்கி  இலங்கையில் 1939 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது

தற்போது இந்த வங்கி 624 கிளைகளுடன் 7714 ஊழியர்களை சேவையில் இணைத்துக்கொண்டு இலங்கையில் மிக சிறப்பாக இயங்கி வருகின்ற வங்கியாகும் .

இந்த வங்கியின் 77 ஆம் ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மேற்தரக் கிளையில் விசேட நிகழ்வுகள் கடந்த வாரங்களில் நடைபெற்றது .

இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு இலங்கை வங்கியில் சேமிப்பு கணக்கினை வைத்துள்ள பாடசாலை மாணவர்களில் 2015  ஆம் ஆண்டு தரம் ஐந்து  புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவித்து அவர்களுக்கு   பரிசில்களும் ,சான்றிதழ்களும்  வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு இலங்கை வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் .எம் .ஐ .நௌபீல்  தலைமையில் நடைபெற்றது .

இந்த  நிகழ்வில் இலங்கை   வங்கி உத்தியோகத்தர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் , மத தலைவர்கள் , வர்த்தக தாபனங்களின்  பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள்  கலந்துகொண்டனர் .