அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்


 (லியோன்)

“ ஒரு துளி இரத்தம் தானம் செய்து ஒரு உயிரை காப்பாற்ற ஒன்றினைவோம் “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம்  17.07.2016   இன்று மட்டக்களப்பு அமிர்தகழி அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தில் நடைபெற்றது
   மட்டக்களப்பு  அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு தந்தை சி .வி .அன்னதாஸ் தலைமையில் அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “ ஒரு துளி இரத்தம் தானம் செய்து ஒரு உயிரை காப்பாற்ற ஒன்றினைவோம் “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான  முகாம்  17.07.2016  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை  நடைபெற்றது 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய  கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினால் பல சமூக பணிகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்

இதன்கீழ்  17.07.2016   காலை 09.00மணி முதல் பிற்பகல் 02.00மணி வரை   இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது .

அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தில் நடைபெற்ற  இந்த இரத்ததான முகாம்  நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் டாக்டர் க.விவேக் , வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள்  ,கத்தோலிக்க இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.