மாவட்ட சாரணர் ஆசிரியர்களுக்கான கலைக்கூற்று பயிற்சி நெறிகள்

  (லியோன்)


மட்டக்களப்பு
 மாவட்ட  பாடசாலைகளை  பிரதிநிதித்துவப்படுத்தி  கலந்துகொண்ட  அனைத்து  பாடசாலைகளின்   சாரண  ஆ சிரியர்களுக்கான கலைக்கூற்று  பயிற்சிகள்  மட்டக்களப்பில் இடம்பெற்றது .


மட்டக்களப்பு  மாவட்ட  சாரணர்  சங்க   பயிற்சி  குழுவின்  ஏற்பாட்டில் மாவட்ட   சாரணர்  பயிற்சி  சபை  இணைப்பாளர்  கிறிஸ்டியின் ஒழுங்கமைப்பில்   மட்டக்களப்பு  மாவட்ட  சாரணர்  ஆசிரியர்களுக்கான கலைக்கூற்று  ஒன்று ,  கலைக்கூற்று  இரண்டு  பயிற்சிகள்   இன்று மட்டக்களப்பு  அரசினர்   ஆசிரியர்   கலாச்சாலை  மண்டபத்தில்  சாரணர்  தலைமைக்  காரியாலய  உதவி  ஆணையாளர்  எஸ் .சவுந்தரராஜன்     தலைமையில்  30.07.2016 சனிக்கிழமை  நடைபெற்றது 

இந்நிகழ்வில்   ஆரம்ப  நிகழ்வாக  தேசிய  கொடி  ஏற்றப்பட்டு  தேசிய கீதத்துடன்   கலைக்கூற்று  பயிற்சி  நிகழ்வுகள்  ஆரம்பமானது

நடைபெற்ற  கலைக்கூற்று  ஒன்று ,  கலைக்கூற்று  இரண்டு     பயிற்சிகளின்   ஊடாக  சாரண  ஆசிரியர்கள்  பாடசாலைகளில்  மாணவர்களின் மத்தியில் மேற்கொள்ள  வேண்டிய ஒழுக்க  நெறிகள் மற்றும் சமுதாயம் சார்ந்த விடயங்கள்  தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன .


இந்நிகழ்வில்   அதிதிகளாக  மட்டக்களப்பு  வலயக்  கல்விப்  பணிப்பாளரும் ,மாவட்ட  சாரணர்  பயிற்சி  குழுவின்  தலைவருமான  கே .பாஸ்கரன் , மட்டக்களப்பு  சாரணர்  சங்க  செயலாளர் . . சுகுமாரன் ,  மாவட்ட  சாரணர் ஆணையாளர்   ,பி . ஆனந்தராஜா , அரசினர்  ஆசிரியர்  கலாச்சாலை அதிபர் எஸ் . யோகராஜா  மட்டக்களப்பு  மாவட்ட  சாரண  உதவி  மாவட்ட ஆணையாளர்    . உதயகுமார்   மற்றும்  மாவட்ட  பாடசாலைகளின்  சாரண ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர்