News Update :
Home » » அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின் எழாவது நாள் திருவிழா

அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின் எழாவது நாள் திருவிழா

Penulis : Anthony Leon raj on Sunday, July 31, 2016 | 7:36 AM

(லியோன்)

மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவசை மஹோற்சவத்தின்  எழாவது    நாள்  திருவிழா சிறப்பாக நடைபெற்றது

இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின்   எழாவது   நாள் பெருவிழா  ஆலய பிரதம குரு ஆகம கிரிஜாமணி சிவாகம கிரிஜாதத்வநிதி ஈசான சிவாச்சாரியார் சிவப்பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார்   தலைமையில் நல்லையா உடையார் குடும்பத்தினரால்  சிறப்பிக்கப்பட்டது .

காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் தொடர்ந்து விசேட யாக பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பம்  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய ஈஸ்வரருக்கு  அபிசேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசே மற்றும் ஆராதனைகளும் நடைபெற்று வசந்த மண்டப பூஜைகளுடன்  சுவாமி உள்வீதி  வீதியுலா சிறப்பாக நடைபெற்றது

நடைபெற்ற  எழாவது   நாள்  உற்சவ பெருவிழாவில் பெருமளவான அடியார்கள் கலந்து சிறப்பித்தனர்.
















Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger