உணவுச் சட்டத்திற்கு முரணான வகையில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

(லியோன்)

மட்டக்களப்பு  கல்லடி பகுதியில்   உணவு சட்டத்திற்கு முரணான வகையில்  கொண்டு செல்லப்பட்ட  உணவு பொருட்கள் பொது சுகாதார பரிசோதகரினால்  கைப்பற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு  கல்லடி  பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் பொது சுகாதார பரிசோதகரினால்  இன்று (20) செவ்வாக்கிழமை    மேற்கொள்ளப்பட்ட  சோதனை  நடவடிக்கையின் போது  சட்டவிரோதமாக  விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட  உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன  .                      

இலங்கை உணவுச் சட்டத்திற்கு எதிராக  நுகர்வுக்கு பொறுத்த மற்ற நிலையில் வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் செய்வதற்காக பார ஊர்தியில் ஏற்றிச்சென்ற  உணவு  பொருட்களே இவ்வாறு கைப்பற்றபட்டுள்ளன .

கைபற்றப்பட்ட  உணவு பொருட்கள்  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்  ஒப்படைக்கப்பட்டத்தை தொடர்ந்து பொருட்களின் உரிமையாளருக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர் வரும் ஒக்டோபர் மாதம்  7 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக கல்லடி  பொது சுகாதார பரிசோதகர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் கே .ஜெய்சங்கர் தெரிவித்தார் .