சுயாதீன ஊடகவியலார் வடிவேல் சக்திவேல் சிறந்த கட்டுரையாளருக்கான விருது வழங்கி கௌரவிப்பு

யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பும், ஊடக தெழிற்சங்க சம்மேளனமும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கும், சிவில் அமைப்புக்களுக்கும், விருது வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வியாழக் கிழமை (21) மாலை நடைபெற்றது.
இதன்போது தமிழ் மொழிமூலம் பத்திரிகை வாயிலாக யுத்தத்திற்குப் பின்னர் பெண்கள் எதிர் கொள்ளும் இன்னல்கள் தொடர்பில் கட்டுரை வடிவில் கருத்துக்களையும், தகவல்களையும், வெளிக்கொணர்ந்த மட்டக்களப்பைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் தெரிவு செய்யப்பட்டு “சிறந்த கட்டுரையாளருக்கான (தமிழ்) விருதும்” பெறுமதிவாய்ந்த பசிசுகளும், வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பின் நாட்டுப் பணிப்பாளர் எம்.அஸாட் தலைமையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் நிகழ்வில் தேசிய உரையாடல், நல்லிணக்கம் மற்றும், அரச மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் ஊடக தெழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ரி.லங்காபேலி, யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பின் ஆசியாப் பணிப்பாளர் அலன் டேவிற், யுஎஸ்எயிட் அமைப்பின் பிரதிப் பணிப்பாளர் உட்பட ஊடகவியலாளர்;கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சிங்கள மொழி மூலம் கட்டுரை எழுதிய பதுளை மாட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் நிமால் அபேசிங்கவுகக்கும், ஆங்கில மொழி மூலம் கட்டுரை வெளிக்கொணர்ந்h மாத்தறை மாட்டத்தைச் சேர்ந்த பிரியஞ்சன் என்ற ஊடகவியலாளருக்கும் இதன்போது விரும், பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும், விருதுகள் வழங்கப்பட்டன.

சுயாதீன ஊடகவியலாளர் வடிவேல் சக்திவேல் அவர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐந்து ஊடக அமைப்புக்கள் இணைந்து நடாத்திய ஊடக விருது வழங்கும் நிகழ்வில் “சிறந்த மக்கள் சேவை ஊடக விருதும்” கடந்த 2013 ஆம் ஆண்டு மட்.களுமுந்தன்வெளி விநாயகர் கலைக்கழகம் நடாத்திய விருது வழங்கும் நிகழ்வில் “சிறந்த பிரதேச ஊடகவியலாளர் விருதும்” பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.