ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவசை மஹோற்சவத்தின் இரண்டாம் நாள் பூஜைகள்

(லியோன்)

மட்டக்களப்பு
அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவசை மஹோற்சவத்தின்  இரண்டாம்  நாள் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது


இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு அமிர்தகழி அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின்   இரண்டாம்  நாள் சிறப்பு பூஜைகள் மட்டக்களப்பு நீர்பாசன திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் ஆலய பிரதம குரு ஆகம கிரிஜாமணி சிவாகம கிரிஜாதத்வநிதி ஈசான சிவாச்சாரியார் சிவப்பிரம்மஸ்ரீ இரங்க வரதராஜ சிவாச்சாரியார் தலைமையில் மிக  சிறப்பாக  இன்று நடைபெற்றது.

காலை விநாயர் வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் தொடர்ந்து விசேட யாக பூஜைகள் நடைபெற்று பிரதான கும்பம்  ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்தியாகிய ஈஸ்வரருக்கு  அபிசேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசே மற்றும் ஆராதனைகளும் நடைபெற்று வசந்த மண்டப பூஜைகளுடன்  சுவாமி உள்வீதி  வீதியுலா சிறப்பாக  நடைபெற்றது 


இன்று நடைபெற்ற  இரண்டாம்  நாள் உற்சவ பெருவிழாவில் பெருமளவான அடியார்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.