சமுதாயயங்கள் சீர்திருத்த அலுவலக ஏற்பாட்டில் “ மதுவை வெற்றி கொள்வோம் “ எனும் கலந்துரையாடல் நிகழ்வு

(லியோன்)

 “ மதுவை வெற்றி கொள்வோம் “ எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் இன்று நடைபெற்றது

சமுதாயஞ்சார் சீர்திடுத்த திணைக்களம் 1999ஆம் ஆண்டின் 46ம் இழக்க சமுதாயஞ்சார் சீர்திருத்தச்சட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு 1999 டிசம்பர் பத்தாம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டு இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது .

இதனுடன் இணைந்ததாக மட்டக்களப்பு சமுதாயயங்கள் சீர்திருத்த காரியாலயத்தினால் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு  நீதவான் நீதிமன்ற சமுதாயயங்கள் சீர்திருத்த காரியாலயத்தினால் ஏற்பாட்டில்  “ மதுவை வெற்றி கொள்வோம் “ எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடல் நிகழ்வு 16.07.2016 இன்று  காலை  09.00  மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை கல்லடி விமோச்சனா இல்லத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் . கணேசராஜா மற்றும் மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி .சத்தியானந்தி நமசிவாயம்  , மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் . அக்பர் , பிரதான ஜெயிலர் . பிரபாகரன் , விமோச்சன இல்ல பொறுப்பாளர் செல்விகா சகாதேவன்  மட்டக்களப்பு சமுதாய சீர்திருத்த காரியாலய உத்தியோகத்தர் கே . சுதர்சன் , சமுதாய சீர்திருத்த  வேலைப் பரிசோதனையாளர்கலான  எஸ் . ஜரோனிக்க . கே . ரஜனிகாந்த் , சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர்  த . மேக ரமணன்  மற்றும் சமுதாய சீர்திருத்த  கட்டளைக்கு உற்பட்ட தவராளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் ,