ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப பீடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

 (லியோன்)

கிழக்குமாகாண கல்வி அமைச்சரினால்  மட்டக்களப்பு ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில்  நிர்மாணிக்கப்பட்டுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப   பீடம் திறந்து வைக்கப்பட்டது

இடைநிலைப்  பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைவாக பாடசாலைகளை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு  ஆரையம்பதி மகா வித்தியாலய   விஞ்ஞான தொழில்நுட்ப  பீடத்தை   வித்தியாலய அதிபர் கே .தவேந்திர குமார்  தலைமையில்  கிழக்குமாகாண கல்வி அமைச்சர் எஸ் .தண்டாயுதபாணி  பிரதம அதிதியாக கலந்துகொண்டு திறந்து வைத்தார் .

இந்நிகழ்வின் போது உரையாற்றிய கிழக்குமாகாண கல்வி அமைச்சர் தெரிவிக்கையில்   கிழக்கு மாகாணத்தில் பல்வேறு குறைபாடுகள்   உள்ளது ,பாடசாலை   பௌதீக வளங்கள் குறைபாடுகள் , ஆசிரியர் பற்றாக்குறைகள் காணப்படுகின்றது .

நகர் புர பாடசாலைகளை  பார்கின்ற போது மட்டக்களப்பு நகருக்கு அண்மையில் உள்ள பாடசாலைகளிலும் பல குறைபாடுகள் இருப்பதை காணக்கூடியதாக உள்ளது .

எனவே இக்குறைபாடுகளை   தீர்க்க வேண்டிய நிலை இருக்கின்றது . கல்வி சமூகத்திற்கு தேவையானவற்றை செய்ய வேண்டிய  பொறுப்பு கல்வி அமைச்சுக்கு   இருக்கிறது .

மிக முக்கியமாக  தொழில்நுட்ப கல்வியை  வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு எடுத்து வருவதாக  தெரிவித்தார் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எஸ் யோகேஸ்வரன் ,  மட்டக்களப்பு கல்வி வலய பணிப்பாளர் கே.பாஸ்கரன்  மற்றும் அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்.