
அரசியலமைப்புக்கான
திருத்தங்களோடு மேம்படுத்தப்பட்ட பிரஜைகளின் சுதந்திரம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது .
அரசியலமைப்புச்
சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தரிக் குழுவானது 2016 ஜனவரி 05ஆம் திகதி முதல் முறையாக ஒன்று கூடி
குறிகிய காலத்திற்குள் நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பொது மக்களுக்கான அமர்வுகளை நடத்தி பொதுமக்களின் கருத்தாலோசனைகளை
பெற்றிருந்தது .
இதன் போது இருபது
அடிப்படை விடயங்களில் பொதுமக்களின் கருத்தாலோசனைகள் பெறப்பட்டது .
இதன் கீழ்
பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பகுப்பாய்வு செய்து
பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையானது அரசியலமைப்பு
சீர்திருத்தம் தொடர்பான கருத்தரிக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது .
இக்குழுவின்
அறிக்கை 310 பக்கம் வரை காணப்படுகின்றது
, இந்த பரிந்துரைகள் தொடர்பில் மக்களுக்கு
தெளிவு படுத்தும் கலந்துரையாடல்
அரச சாரா உள்ளூர் தொண்டு நிறுவனங்களின் ஒன்றிய இணையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை மட்டக்களப்பு இணையம் நிறுவன அலுவலகத்தில்
இடம்பெற்றது .
இந்த கலந்துரையாடலில் மாற்றுக் கொள்கைக்கான நிலையத்தின் சிரேஷ்ட
ஆய்வாளர் லயனல் குறுக்கே , சட்டத்தரணி எஸ் .ஜி .
புஞ்சி ஏவா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரச சாரா உள்ளூர் தொண்டு நிறுவனங்களின்
பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்