மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறாவது கண்ணகி கலை இலக்கிய விழா

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறாவது கண்ணகி கலை இலக்கிய விழா மட்டக்களப்பு மண்முனை மேற்கு கன்னன்குடா மகா வித்தியாலத்தில் ஜூன் 25 ஆம்  26ஆம் திகதிகளில்  இடம்பெற்றது .

 முதல் நாள் நிகழ்வாக  கண்ணகி கலை இலக்கியகூடல்  விழாக்குழுத் தலைவர்  செல்வி க . தங்கேஸ்வரி தலைமையில் கலை இலக்கிய காலை அமர்வுகளும்  கண்ணகி கலை இலக்கியகூடல்  துணைக்காப்பாளர்  எஸ் . எதிர்மன்னசிங்கம்  தலைமையிலும் ,விழாக்குழு துணைத்தலைவர்  ஞா . ஸ்ரீநேசன் தலைமையில்  கலை இலக்கிய மாலை அமர்வுகளும்    இடம்பெற்றது .

இரண்டாம் நாள் நிகழ்வாக காலை கண்ணகி வழக்குரை காதையின் வீரக் கதாபாத்திரங்கள் தொடர்பாக கண்ணகி கலை இலக்கியக்கூடல்  காப்பாளர் எஸ் . மௌனகுரு தலைமையில் காலை ஆய்வரங்கும் அதனை தொடர்ந்து ஆய்வாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .

கலை அரங்கும் நிறைவு விழாவும் கண்ணகி கலை இலக்கிய நிறைவு நிகழ்வுகளும் ,கலை கலாசார ,வரலாற்று பதிப்பு நூல்கள் விற்பனையும் கண்காட்சி நிகழ்வும் , இலக்கியக்கூடல் செயற்குழு உறுப்பினர் சட்டத்தரணி கே . துரைராசசிங்கம் தலைமையில் நேற்று மாலை அமர்வுகள்  இடம்பெற்றது .


இடம்பெற்ற ஆறாவது கண்ணகி கலை இலக்கிய விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின்  கலை இலக்கிய வாதிகள் ,இலக்கிய ஆய்வாளர்கள் , விரிவுரையாளர்கள் ,  கல்விமான்கள்,மாவட்ட  நீதிபதி ,சட்டத்தரணிகள் , ஆசிரியர்கள் ,மாணவர்கள் , கண்ணகி கலை இலக்கியக் கூடல் உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்