மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவின் மாதாந்த குழு கூட்டம்

 (லியோன்)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான மாதாந்த குழு கூட்டம்
  26.06.2016 மாலை தாண்டவன்வெளியில்  இடம்பெற்றது
.மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் இயங்கும்  சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான மாதாந்த குழுக் கூட்டம் சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ஸ்டீபன் ராஜன் தலைமையில்  26.06.2016 மாலை  மட்டக்களப்பு  தாண்டவன்வெளி பேர்டினன் மண்டபத்தில்  இடம்பெற்றது .

இடம்பெற்ற மாதாந்த குழுக்கூட்டத்தில் போது கடந்த நாட்களில் தமது கிராம சேவை பிரிவுகளில்  இடம்பெறுகின்ற சமூக மட்ட பிரச்சினைகள் அதனுடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பாகவும் ,கிராம மட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள்  தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .

உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள்  தொடர்பாக சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுடன் மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து  செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சிவில் பாதுகாப்பு குழு தலைவரினால் தெரிவிக்கப்பட்டது .


இம்மாதத்திற்கான குழுக்கூட்டத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  ஹெட்டிஹாரச்சி , மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள்,மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .