மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 141 ஆண்டு நிறைவு விழா (VIDEO & PHOTOS)


(லியோன்)

மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின்
141 ஆண்டு நிறைவு விழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது .

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 141 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம்  கல்லூரி அதிபர் திருமதி துரைராஜசிங்கம் தலைமையில் 29.06.2016  காலை இடம்பெற்றது .

29.06.2016  காலை மட்டக்களப்பு நகரில் இடம்பெற்ற ஊர்வலத்தில் கல்லூரி மாணவர்கள் , ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .

ட்டக்களப்பு நகர் மத்தியில் அமைந்துள்ள மகாஜன மகளீர் கல்லூரி 1875 ஆம் ஆண்டு மெதடிஸ்த மிசன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு மீண்டும் 1925 ஆம் ஆண்டு  மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் என்ற பெயர் மாற்றப்பட்டது .

தொடர்ந்து இப்பாடசாலை 1962 ஆம் ஆண்டு   அரச கட்டுப்பாட்டில் கீழ் இயங்கு பாடசாலையாக உள்வாங்கப்பட்டு  இப்பாடசால அரசடி  தமிழ் கலவன் பாடசாலை என பெயருடன் இயங்க தொடங்கியது .

தொடர்ந்து 1976 ஆண்டில் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களை உள்வாங்கப்பட்டு அரசடி மகா வித்தியாலயமாக திகழ்ந்து . அரசடி மகா வித்தியாலயம் 1992 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மகாஜன கல்லூரி என்ற பெயரை பெற்றுக்கொண்டது  .                             

இக்காலப்பகுதியல் கல்வி பொது சாதாரண தரம்  மற்றும் ,உயர் தர  வகுப்புகள் ஆராம்பிக்கப்பட்டதுடன் , பல்கலைகழகதிற்கும் மாணவர்கள் தெரிவானார்கள்  இதனை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டில் இருந்து மாணவிகளை மட்டும் உள்வாங்கப்பட்டு கல்வித்திணைக்கள அனுமதியை பெற்றுக்கொண்டு 2004 ஆம் ஆண்டு இப்பாடசாலை முழுமையாக  பெண்கள் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு  தற்போது பெண்கள் கல்லூரியாக திகழ்கிறது..


இந்த கல்லூரியின் 141 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் மகாஜன கல்லூரி தமது கல்லூரி 141வது ஆண்டு நிறைவினை தினத்தை  மிக சிறப்பாக நினைவு கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது .