( DINEKING ) டயின் கிங் ரேஸ்ருரன்ட் மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

(லியோ)

மட்டக்களப்பு  திருகோணமலை வீதி  இலக்கம் ,499இல்   டயின்  கிங் ரேஸ்ருரன்ட் இன்று வியாழக்கிழமை காலை 09.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு  திருகோணமலை வீதியில்  திறந்து வைக்கப்பட்டுள்ள  ( DINEKING ) டயின்  கிங் ரேஸ்ருரன்ட்   உள்நாட்டு ,வெளிநாட்டு  உணவு வகைகளை கொண்டதாக குளிருட்டப்பட்ட  உணவகமாக அமைக்கப்பட்டுள்ளது.


இன்று காலை இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில்   மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவரும் ,ஈஸ்ட் லகூன் ஹோட்டல் உரிமையாளருமான .  எம் .செல்வராஜா , வர்த்தக சங்க ஆலோசகரும், பிரபல வர்த்தகருமான  ஏ .ராஜேந்திரன்  வர்த்தக சங்க அங்கத்தவர்களான எஸ் . சிவபாதசுந்தரம் , எஸ் . சன்முகநேசன் , மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஸ்டீபன் ராஜன் மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை விதி  ஹட்டன் நசனல் வங்கி கிளை முகாமையாளர் ஆகியோர்  கலந்துகொண்டனர்.


இந்த  ரேஸ்ருரன்ட்  காலை 06.00 மணி முதல் இரவு 11.00 மணி  வரை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.