கொக்கட்டிச்சோலையில் மூன்றாவது சிறுவர்,மகளிர் விவகார பிரிவு திறந்துவைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணகருவில் சிறுவர் மகளிர் விவகார அமைச்சின் அனுசரணையுடன் பிளான் இன்டர்நஸனலின் நிதியுதவியுடன் பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கான தனி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்முறையினை தடுக்கும் வகையில் கொக்கட்டிச்சோலையில் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்கான கட்டிடம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

கோக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் ரி.கௌரி தினேஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் உபாலி ஜயசிங்க ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

சுpறப்பு அதிதிகளாக பிளான் இன்டர்நசனல் ஸ்ரீலங்காவின் கிழக்கு பிராந்திய ஆலோசகர் எஸ்.இராமமூர்த்தி மற்று சிறுவர் மகளிர் பிரிவு உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

ஜப்பான் பிளான் இன்டர்நசனல் இந்த கட்டிடத்திற்காக முப்பது இலட்சம் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளது.

இதன்போது சிறுவர் மற்றும் மகளிருக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு வீதி நாடமும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே இந்த பிரிவு காத்தான்குடி மற்றும் வாழைச்சேனையில் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.