நேர்மையான அரச சேவைக்கான "நேர்மைக்கலாசாரம்- கிளீன் ஸ்ரீலங்கா " தேசிய செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் நேற்று (24) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், நேர்மை வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஜூலை 28 ஆம் திகதி காலை 9.00மணிக்கு நேர்மை கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபவணி நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அந்தவகையில் ஜூலை 27 நிறுவன ரீதியாக நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 28 நிதி, டிஜிட்டல், தொழில் முயற்சியாண்மை மற்றும் தொழில்நுட்ப நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 29 ஆன்மீக, நெறிமுறை, கலாசார மற்றும் சமூக நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 30 செயற்பாட்டு, உட்கட்டமைப்பு,சேவை வழங்கல் மற்றும் உழைப்பு நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும், ஜூலை 31 – சுற்றாடல், வள முகாமைத்துவ, கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மையை மேம்படுத்தும் நாளாகவும் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஸ்ரீபதி,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








