கிழக்கின் இளைஞர் முன்னியின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகம்

(லியோ)


கிழக்கின் இளைஞர் முன்னியின்  ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகம் இன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது .


கிழக்கின் இளைஞர் முன்னியின்  அமைப்பின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் திட்டமிடலின் கீழ் “ உதிரம் கொடுத்து உயிர் காக்கும் பனி “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்ததான முகாம்  இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றது .

இந்நிகழ்வினை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்  கே .சுகுணன் ஆரம்பித்து வைத்தார்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் சமூக சேவைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கொள்கையின் கிழக்கின் இளைஞர் முன்னியின்  அமைப்பின் தலைவர் கணேசமூர்த்தி கோபிநாத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக  இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது  .


இதன்கீழ் இன்று காலை 08.30  மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை  இந்த இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது .

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின்  இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் கிருஸ்ணவேணி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் , களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின்  ஊழியர்கள் மற்றும் கிழக்கின் இளைஞர் முன்னியின்  அமைப்பின் இளைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.