மட்டக்களப்பில் இலவச யோகாப் பயிற்சி

(இ.சுதாகரன்)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் கடந்த பத்து வருட காலமாக பிரபல யோகா சிகிச்சை நிபுணர் கலாபூஷணம் செல்லையா துரையப்பாவை விரிவுரையாளராகக் கொண்டு பத்து யோகா சிகிச்சை பாடநெறிகள் இலவசமாகப் போதிக்கப்;படுகின்றன.

இப்பாடநெறியில் மேலை நாட்டவர்கள் உட்பட நூற்றுக்கணக்கானேர் இதில் இணைந்து உடல் இஉள இஇஆன்மீக சமுதாய ஆரோக்கியம் அடங்கி முழுமையான ஆரோக்கியத்தினை பெற்றுள்ளனர்.

நடப்பு ஆண்டிற்கான புதிய யோகா சிகிச்சைப் பாடநெறிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் இதில் இணையும் ஆர்வமுள்ள அனைவரும் மட்டக்களப்பு வெயிலி குறுக்கு வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் தமது விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் கே.இரவிந்திரன் கேட்டுள்ளார்.