மட்டக்களப்பில் நூற்றுக்கு மேற்பட்ட நிதி நிறுவனங்கள் மக்களை கடன்சுமைக்குள் தள்ளுகின்றது –பிரதேச செயலாளர் தவராஜா

நூற்றுக்கு மேற்பட்ட நிதிநிறுவனங்கள் அதிகூடிய வட்டிக்கு பணத்தினை வழங்கி மக்களை கடன்சுமைக்குள் தள்ளிவருவதாக மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.


மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஐந்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகில் ஐந்தாவது ஆண்டு நினைவு கேக்வெட்டப்பட்டு பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் கே.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளா வி.தவராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் எஸ்.சந்தானம்,மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி யு.ஜே.ஹெட்டியாராட்சி மற்றும் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வங்கி முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது காந்தி பூங்கா அருகில் இருந்து கலாசார நிகழ்வுகளுடன் நடைபவனியும் நடைபெற்றதுடன் நடைபவனியானது வங்கியினை அடைந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன்போது பெண்களுக்கான விசேட வைப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் சுயதொழில் கடன்களும் வழங்கிவைக்கப்பட்டன.